Map Graph

சாமுண்டா தேவி கோயில்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்

சாமுண்டா நந்திகேசுவர் தாம் என்றும் அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோயில் என்பது துர்க்கையின் வடிவமான சாமுண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இது வட இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தின் தர்மசாலா தெக்சில் பாலம்பூர் நகரத்திலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது இமாச்சல பிரதேசத்தில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ள கோயிலாகும். இங்கு எந்த பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. மிகவும் பழமையான ஆதி இமானி சாமுண்டா மூலவர் சந்நிதி, மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், யாத்ரீகர்கள் சென்றடைவது கடினம். எனவே, இந்த கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டது.

Read article
படிமம்:Chamunda_Devi_Temple_30.JPGபடிமம்:India_Himachal_Pradesh_location_map.svgபடிமம்:India_location_map.svg